கர்ப்பணிகளுக்கு உதவி தொகை, ஊட்டச்சத்து பெட்டகம் தாமதம்; பல மாதமாக வழங்காததால் பாதிக்கப்படும் அபாயம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பெட்டகம் , உதவி தொகையும் பல மாதங்களாக வழங்காததால் பாதிப்படைந்து வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழப்பை தடுக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதில் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ரூ. 14 ஆயிரம் 5 தவணையாக உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதில் பயன்பெறுவதற்காக கர்ப்பிணிகள் ஆரம்ப, நகர சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கின்றனர்.ஆனால் மாவட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், உதவித் தொகையும் முதல் தவணை மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்த தவணைகள் வழங்கப்படவில்லை. கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் கேட்டால் குறைவாக வருவதால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக வருவதை பகிர்ந்து கொடுக்கிறோம் என ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதனால் கர்ப்பிணிகள் ஏமாற்றமடைவதோடு, உடல் நிலையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் மாவட்ட சுகாதாரத்துறையினர் கர்ப்பிணிகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து பெட்டகம், உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகின்றனர்.விருதுநகர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் யசோதா கூறியதாவது:ஊட்டச்சத்து பெட்டகங்கள் பற்றாக்குறை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் தவணைத் தொகை பெற வங்கிக் கணக்கு, ஆதார் எண் போன்ற பிரச்னையால் சிலருக்கு தாமதம் ஆகிறது.மேலும் முதல்முறை கர்ப்பமானவர் குறித்த தகவல் டில்லி சென்று வர வேண்டியுள்ளதாலும் உதவித் தொகை கிடைப்பதில் தாமதமாகலாம். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X