வாறுகால், தெருவிளக்கு குடிநீர் வசதி இல்லாததால் அவதி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
வாறுகால், தெருவிளக்கு குடிநீர் வசதி இல்லாததால் அவதி
Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 


ராஜபாளையம், : ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லுார் கிராமத்திற்கு உட்பட்ட இ.எஸ்.ஐ., காலனியில் ரோடு, வாறுகால், பொதுக் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகர் பகுதி ஒட்டியுள்ள இ.எஸ். ஐ., காலனி உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குடியிருப்பின் சிறு தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் ரோடுகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.குடியிருப்பு வாசிகளுக்கு புழங்குவதற்கான தண்ணீர் 8 நாளுக்கு ஒரு முறை வருகிறது.குடிநீர் சப்ளை இல்லாத இப்பகுதியில் புழக்கத்திற்கான நீரும் குறைவாகவே உள்ளதால் பற்றாக்குறையால் பொது மக்கள் தவிக்கின்றனர்.

ரோடுகளில் ஆக்கிரமிப்பால் 30 அடி ரோடு சுருங்கி எதிரே வரும் வாகனங்களுக்கு வழியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.மலையை ஒட்டிய பகுதியாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு சுகாதார கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே மேல்நிலை தேக்க நீர்தொட்டி கட்டப்பட்டு 33 ஆண்டுகள் கடந்து உள்ளதால் துாண்கள் கம்பிகள் வெளியேறி அபாய நிலைக்கு சென்றுள்ளது. ஆபத்தான இத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும்.புதிய பகுதிகளில் தெருவிளக்கு வசதி செய்யப்படாமல் உள்ளது. ரேஷன் கடையும் வாடகை கட்டடத்தில் தற்போது வரை இயங்கி வருகிறது.இங்கு சிறுவர் பூங்கா, சமுதாய கூடம் உட்பட அடிப்படை வசதிகளுக்காக தொடர் மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் விரக்தியடைந்துள்ளனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X