தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வில் கோடேபாளையம் அரசு பள்ளி மாணவர்கள், 6 பேர் தேர்ச்சி பெற்றனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய அளவில் தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2021-22ம் கல்வி ஆண்டிற்கான தேர்வுமுடிவு வெளியானதில், பவானிசாகர் அருகே, கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களான தனேஸ்வரி, திலீபன், நந்தகோபன், ஷர்மிளா, கனகசிந்து, சுஜாதா ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வட்டார அளவில் இப்பள்ளி தொடர்ந்து, 9வது ஆண்டாக இத்தேர்வில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மத்திய அரசு, மாதந்தோறும் வழங்கும், 1,000 ரூபாய், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்குகிறது.