செய்திகள் சில வரிகளில் கரூர்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


தேசிய திறனாய்வு தேர்வில்
குளித்தலை அரசு பள்ளி சாதனை
குளித்தலை, ஜூன் 30-
குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேசிய திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.
குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 2021-22ம் கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு, என்.எம்.எம்.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தேர்வில், குளித்தலை அரசு மகளிர்

மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 36 மாணவியர் தேர்வு எழுதினர்.
இதில், 10 மாணவியர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். கரூர் மாவட்ட அளவில், குளித்தலை அரசு மகளிர் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் கிடைக்க காரணமாக இருந்த மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா பாராட்டி வாழ்த்து தெரிவித்து, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

சிந்தலவாடி நெடுஞ்சாலையில்
கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம், ஜூன் 30-
சிந்தலவாடி நெடுஞ்சாலை பகுதியில், கொய்யாப்பழம் விற்பனை மும்முரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம், சேங்கல், திருக்காம்புலியூர், திருச்சி மாவட்டம் ஆகிய பகுதியில் கொய்யாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. கொய்யாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள், பழங்களை மரத்திலிருந்து பறித்துக்கொண்டு வந்து, கரூர்-ருச்சி நெடுஞ்சாலை சிந்தலவாடி அருகே, சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து
வருகின்றனர்.
அந்த வழியாக செல்லும் மக்கள் கொய்யாப்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தற்போது, கொய்யாப்பழம் வரத்து அதிகரிப்பு காரணமாக, கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால், உள்ளூர் மக்களும் பழங்களை வாங்கி
செல்கின்றனர்.

அதிக வட்டி கேட்டவர் கைது
கரூர், ஜூன் 30-
கரூரில் அதிக வட்டி கேட்டு, மூதாட்டியை மிரட்டியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுசீலா, 67; இவர், வேப்பம்பாளையத்தை சேர்ந்த
செல்வகுமார், 50, என்பவரிடம், மூன்று ஆண்டுகளுக்கு முன், 10 சதவீத
வட்டிக்கு, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதுவரை சுசீலா, 20 ஆயிரம் ரூபாய் வரை, செல்வ
குமாருக்கு வழங்கியதாக
தெரிகிறது.
இந்நிலையில் கடந்த, 20ல் செல்வகுமார், சுசீலா வீட்டுக்கு சென்று மேலும், 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, சுசீலா அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X