சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 22. இவரது உறவினர் கார்த்திக், 21. இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, கிருஷ்ணாவின் உறவினரின் சொத்து சம்மந்தமாக முன் விரோதம் இருந்த காரணத்தால், அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மா. 40, அவரது உறவினர்கள் ராஜ்குமார், கோகுல், வடிவேல், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உட்பட, 5 பேர், கிருஷ்ணா, கார்த்திக் இருவரையும் சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர்.
காயம் அடைந்த, இருவரும் சேந்தமங்கலம் தாலுகா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.