வாலிபருக்கு 'குண்டாஸ்' | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
வாலிபருக்கு 'குண்டாஸ்'
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

மணவாள நகர்:மணவாள நகர் பகுதி யில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.


கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் காலனியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் தினேஷ்குமார், 24. இவர், கடந்த 11ம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா போன்ற பல்வேறு வழக்குகளில் சிறை சென்றது தெரியவந்தது.இதையடுத்து, மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின்படி, எஸ்.பி., பி.சி.கல்யாண், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், தினேஷ்குமாரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை, மணவாள நகர் போலீசார் நேற்று, புழல் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X