மாமல்லபுரம், :சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க, 188 நாடுகளைச் சேர்ந்த 343 அணிகள் பதிவு செய்து உள்ளன.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் 28 தேதி துவங்கி, ஆக., 10 வரை நடக்கிறது.இப்போட்டிகள் நடக்கும், மாமல்லபுரம் 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், பொதுப்பணித் துறை சார்பில் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன.மாமல்லபுரம் நகர் பகுதியில், பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைகள், மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளன.இந்த நிலையில், சர்வதேச செஸ் வீரர்கள் தங்க, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன.இது குறித்து, அரசுத் துறையினர் கூறியதாவது:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, 188 நாடுகளில் இருந்து 343 அணிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளன.ஓர் அணியில், ஆண்கள், பெண்கள் என, தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.குழுவிற்கு ஒரு தலைவர் இருப்பார். அந்த வகையில் இருபாலர் குழுக்களில் ஆறு பேர் இடம்பெறுவர். இந்த இரு குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரு தலைவர் என, ஓரணியில் மொத்தம் 13 பேர் இடம் பெறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.