நாகப்பட்டினம்:நாகை அருகே முதலிரவில், மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாப்பிள்ளையை, போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினி, 26. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; கொத்தனார்.இரு வீட்டார் சம்மதத்துடன், ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஹிந்து முறைப்படி கடந்த, 27ம் தேதி திருமணம் நடந்தது.
முதலிரவின் போது, ராஜ்குமார், புதுப்பெண் நளினியிடம் அத்துமீறி நடந்ததில், உடல் முழுதும் காயங்களுடன், நளினி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நளினியின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரின் படி, நாகை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ராஜ்குமாரை தேடி வந்தனர்.நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.