'ஈமு' நிறுவன மோசடி வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'ஈமு' நிறுவன மோசடி வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

கோவை:'ஈமு' நிதி நிறுவனம், 1.20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம், காங்ேகயம், சென்னிமலை ரோட்டில், 'ராஜா ஈமு' மற்றும் 'தமிழ் ஈமு பார்ம்' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் செயல்பட்டது.இந்நிறுவனத்தில், 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 7,000 ரூபாய் வட்டி, போனஸ் தருவதாக விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, 72 பேர், 1.20 கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்தனர்.ஆனால், முதலும், வட்டியும் திருப்பி தராமல் மோசடி செய்ததால், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.நிறுவன இயக்குனர்களான, சென்னை, வடபழநி, குமரன் காலனியைச் சேர்ந்த தமிழ்பிரபு, 38, ஈரோடு அம்மாபேட்டை, காமராஜர் வீதியைச் சேர்ந்த ராஜசேகர், 42, மற்றும் ரவிச்சந்திரன், கிருத்திகா, குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை 'டான்பிட்' கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ரவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.தமிழ்பிரபு, ராஜசேகர் ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை, 1 கோடியே, 18 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.அபராத தொகையில், 1.18 கோடி ரூபாயை, டிபாசிட்தாரர்களுக்கு பிரித்துக் கொடுக்க உத்தரவிட்டார். தீர்ப்பின் போது, இருவரும் கோர்ட்டில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X