கொலை வழக்கில்கைதான வாலிபருக்கு'குண்டாஸ்' | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கொலை வழக்கில்கைதான வாலிபருக்கு'குண்டாஸ்'
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கொலை வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமு, 26; இவர், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்தால், பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் ராமுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., செல்வகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில் கலெக்டர் ஸ்ரீதர், குண்டர் சட்டத்தின் கீழ் ராமுவை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, வரஞ்சரம் போலீசார் ஏற்கனவே கடலுார் மத்திய சிறையில் உள்ள ராமுவிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்கினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X