உடுமலை ரோட்டில் அதிவேக வாகனங்களால் அபாயம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விரைவில் புதுப்பிக்கணும்!

வால்பாறை, சோலையாறு அணைப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கட்டடங்கள் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- மது, சோலையாறு.

படிக்கட்டை சீரமைங்க!
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா நடுநிலைப்பள்ளி செல்லும் வழித்தடத்திலுள்ள படிக்கட்டுகள், இடிந்த நிலையில் உள்ளன. இதில், மாணவர்கள் தடுமாறி விழுந்து, விபத்துக்கு உள்ளாகின்றனர். படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும்.- தருண், வால்பாறை.

'பஸ் பே' வேண்டும்
பொள்ளாச்சி - கோவை ரோடு, உடுமலை ரோட்டில் 'பஸ் பே' இல்லாததால், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மனோஜ், பொள்ளாச்சி.

சுகாதாரம் இல்லை
பொள்ளாச்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மருத்துவமனை வளாகத்தை துாய்மையாக பராமரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கமல், பொள்ளாச்சி.

மழைநீர் தேக்கம்
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டில் ரயில்வே பாலம் அருகே தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அந்த பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மகேஸ்குமார், மீனாட்சிபுரம்.

ரோட்டை சீரமைக்கணும்!
பொள்ளாச்சி நகரத்தினுள், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டு, பல இடங்களில் முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், போக்குவரத்து பாதித்து விபத்துகள் ஏற்படுகின்றன.- மகுடீஸ்வரன், பொள்ளாச்சி.

மழைநீர் தேக்கம்
பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் பல இடங்களில் ரோடு சிதிலமடைந்து பள்ளங்களாக உள்ளதால், மழைநீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்.- முருகானந்தம், பொள்ளாச்சி.

பிரச்னைகள் ஏராளம்
பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சியில் சாக்கடை கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதுடன், தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- தனபால், பொள்ளாச்சி.

கடும் துர்நாற்றம்
ஆனைமலை, அர்த்தநாரிபாளையம் ஊராட்சியில், பாலத்தின் அருகே, குப்பை குவிக்கப்படுவதால், சுகாதாரம் பாதித்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ், அர்த்தநாரிபாளையம்.

சிதிலமடைந்த ரோடு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகே ரோடு சிதிலமடைந்து உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும்.- மீனா, பொள்ளாச்சி.

அதிவேக வாகனங்களால் மக்கள் அச்சம்
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஊஞ்சவேலாம்பட்டி வரையிலும் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தி, சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில், வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால், சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.- முத்துக்குமார், பொள்ளாச்சி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X