பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஊராட்சிகளில் நடக்கும் இடைத்தேர்தலில், நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஊரக உள்ளாட்சியான ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு, கடந்த மாதம், 20ம் தேதி மனு தாக்கல் துவங்கி, 27ம் தேதி வரை பெறப்பட்டது.நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை முடிந்து, நேற்று, 30ம் தேதி வேட்பு மனு வாபஸ் நடந்தது. வரும், 9ம் தேதி ஓட்டுப்பதிவும், 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
உடுமலை: குடிமங்கலம் ஊராட்சி, 1வது வார்டு உறுப்பினர், உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஊராட்சி அலுவலகத்தில், வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.இதில், 3 மனுக்கள் பெறப்பட்டிருந்தது. மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு, நேற்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. யாரும் வாபஸ் பெறாத நிலையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி, மகேஷ், பாப்புசாமி, பெரியசாமி ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். வரும், 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.