ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.
பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், இணை பொது செயலாளர் ராமசுப்பு, புலவர்கள் வசந்தா, பாரதி, பக்ஷிசிவராஜன், விவேகானந்தா குடில் சுவாமி பிரணவானந்தா, திருத்தொண்டர் மடம் சுவாமி சிவசேதுராம முருகவேல், ராமநாதசுவாமி கோயில் சிவமணி குருக்கள், சாந்தா அறக்கட்டளை நிர்வாகி சாந்தாம்மா, வி.ஹெச்.பி., நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 125 கிராம கோயில் பூஜாரிகள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.