கன்னியாகுமரியில் சூறாவளி 150 அடி உயர தேசிய கொடி சேதம் | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
கன்னியாகுமரியில் சூறாவளி 150 அடி உயர தேசிய கொடி சேதம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் சூறாவளியால் 150 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி சேதம் அடைந்தது.


விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தாமதமானது.மாவட்டத்தில் ஆடி மாதம் காற்று அதிக வேகத்தில் வீசும். ஆனல் இந்த ஆண்டு ஆடி பிறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை முதல் சூறாவளி வீசுகிறது. மரங்கள் விழுந்துள்ளன.
அ.தி.மு.க., எம்.பி., விஜயகுமார், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.75 லட்சம் ஒதுக்கி கன்னியாகுமரியில் 150 அடி உயர கொடிகம்பத்தில் 32 அடி அகலம், 48 அடி நீளம் கொண்ட தேசிய கொடி நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. நேற்று வீசிய காற்றில் இந்த கொடி சேதமடைந்தது.

எளிதில் சேதம் அடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் தேசிய கொடி சேதம் அடைந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்றிரவு சேதமடைந்த கொடி இறக்கப்பட்டது. காற்றின் வேகம் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X