கஞ்சா விற்பனை வழக்கு: எஸ்.ஐ.,மகன், டிரைவர் கைது | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
கஞ்சா விற்பனை வழக்கு: எஸ்.ஐ.,மகன், டிரைவர் கைது
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரிமாவட்டம் திருவட்டார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சி.ஆர்.பி.எப். எஸ்.ஐ., மகன் ஆல்பின் சாமுவேல் 29, பள்ளி வேன் டிரைவர் பிரதீஷ் 28, கைது செய்யப்பட்டனர்.


இம்மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்க எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவட்டார் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற பைக்கை துரத்தி சென்று பிடித்த போது அதில் இருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பைக்கில் வந்தகல்லங்குழி ஆல்பின் சாமுவேல், முளவிளை பிரதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாட்ஸ்ஆப் குழு அமைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு அவர்கள் கஞ்சா சப்ளைசெய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X