ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாவது:உலக வெப்பமயமாக்கலை தடுப்பதில், மரபுசாரா மின் உற்பத்தி பிரதானமானது. தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி குறைவு.சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், நெட் மீட்டர் அமைத்து, 1 யூனிட், 2.08 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. தவிர அரசின் மின் கடத்தியை பயன்படுத்தும் வகையில், 1 கே.வி.,க்கு, 385 ரூபாய் கட்டணமாக பெறுகின்றனர்.
ஆனால், வணிக நிறுவனங்கள் 1 யூனிட், 8.05 ரூபாய்க்கு மின்சாரத்தை பெறுகின்றன. இதன் மூலம் மின் உற்பத்தி செய்வோர், தண்டம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் தமிழக அரசு, கூடுதல் விலைக்கு மின்சாரத்தை பெற்று, பொது கிரிட்டில் எவ்வித கட்டணமும் பெறாமல், சொந்த செலவில் கடத்தி வருகிறது.இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சூரிய மின்சாரத்துக்கு கட்டணத்தை யூனிட்டுக்கு, 4.16 ரூபாய் என உயர்த்தி, கடத்தி பயன்படுத்தும் தொகை, பிற தொகைகளை நீக்க வேண்டும்.இவ்வாறு விவாதித்தனர்.