இவர்கள், பயங்கர வாத வாதிகள் போல, கடல் மற்றும் தரை வழியாக ஊடுருவினர்.இவர்களை, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் உளவுத் துறை என, பல்வேறு படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இப்பயிற்சியில், அதிநவீன கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், சாதாரண மற்றும் ஜெட் வேக படகுகள் பயன்படுத்தப்பட்டன.
பயங்கரவாதிகள் கப்பலில் பிடித்து வைக்கப்பட்டு இருப்பது போல, 14 பயணக் கைதிகள், பிளாக் கேட் காமாண்டோக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.தமிழகம் முழுதும் 30 இடங்களில், பயங்கரவாதிகளின் ஊருவல் முறியடிக்கப்பட்டது; 105 பேர் கைது செய்யப்பட்டனர்; 19 படகுகள் கைப்பற்றப்பட்டன.இந்த பாதுகாப்பு ஒத்திகையில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் அசத்தலாக செயல்பட்டனர்.
இது குறித்து, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கூறுகையில், 'சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சுய பரிசோதனை செய்ததில், நம் பாதுகாப்பு அமைப்பு படையினர் செயல்பட்ட விதம் திருப்திகரமாக இருந்தது' என்றனர்.