திருப்பூர்;திருப்பூர் அடுத்த கூலிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் இது மூடப்பட்டது. குறைந்தளவு பயணிகள் வந்து செல்வதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.மா. கம்யூ., திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், திருப்பூர் எம்.பி., சுப்பராயனிடம் அளித்த மனு:திருப்பூர் நகர விரிவாக்கம் என்பது தற்போது வேகமாக விரிவடைந்து வந்துள்ளது. கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், நல்லகட்டிபாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், தோட்டத்துபாளையம், ஜி.என்.கார்டன், ஜி.எம்.பாலன் நகர், பொம்முநாயக்கன்பாளையம், நல்லாத்துப்பாளையம், சேடர்பாளையம், மொரட்டுபாளையம், பாப்பநாயக்கனுார், குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாரணாசிபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், சமத்துவபுரம், ராக்கியாகவுண்டன் புதுார், பாரப்பாளையம், குளத்துப்பாளையம், பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளும், புதிய குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.இப்பகுதியினர் கோவை, ஈரோடு பகுதிக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் துறை என ேவலைக்குச் செல்வோர் விரைவாகவும், செலவு குறைவாகவும் பயணிக்கும் வகையில் ரயில் பயணம் உள்ளது.இங்கு இயங்கி வந்த கூலிபாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறந்து, ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.திருப்பூரில் உள்ள ரயில் சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றவகையில் இப்பகுதி இருக்கும். இங்கிருந்து திருச்சி - பாலக்காடு என்.எச்., ரோடு, கோவை - சேலம் என்.எச்., ரோடு எட்டு கி.மீ., தொலைவில் உள்ளன. சரக்கு போக்குவரத்துக்கு பிற பகுதிகளுக்கு செல்ல ரிங் ரோடும் உள்ளது.எனவே கடந்த 7 ஆண்டாக மூடப்பட்டுள்ள கூலிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் திறந்து செயல்பட ணே்டும்.