உடைந்த பால் பாக்கெட் விவகாரம்ஆவின் அலுவலகத்தில் திடீர் ஆய்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
உடைந்த பால் பாக்கெட் விவகாரம்ஆவின் அலுவலகத்தில் திடீர் ஆய்வு
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

கோவை;கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகத்தில், நேற்று விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை ஆவின் சார்பில் வினியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் கசிவு இருப்பதாவும், பாக்கெட் உடைந்திருப்பதாகவும், தங்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுவதாகவும், ஏஜென்டுகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 28ம் தேதி மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லே அவுட் ஆகிய இடங்களில், வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் பெருமளவு உடைபட்டிருந்தன.இது பற்றி தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, முதல்வருக்கும், பால் வளத்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பியிருந்தார்.அதைத் தொடர்ந்து, சென்னை ஆவின் விஜிலன்ஸ் அதிகாரிகள், நேற்று கோவை வந்திருந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.பால் பாக்கெட் உடைபடுவதற்கான காரணம் என்ன, உடைபட்ட பாக்கெட் என்று தெரிந்தும் எப்படி வினியோகத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள் என்று, அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆவின் அலுவலகத்தில் இருக்கும் சரக்கு இருப்பு பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X