'இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க முதுமை காரணமல்ல' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க முதுமை காரணமல்ல'
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

''ஆண்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரவில் அடிக்கடி நிறுநீர் கழிப்பது முதுமையின் அடையாளமல்ல,'' என, கே.எம்.சி.எச்., லேபராஸ்கோபிக் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் குப்புராஜ் நாராயணசாமி கூறினார்.

அவர் கூறியதாவது:இரவில் துாக்கத்தில் இருந்து எழுந்து, சிறுநீர் கழிக்கும் நிலை, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படுகிறது. இதற்கு 'நாக்சூரியா' என்று பெயர். இதனால்,இரவில் துாக்கமின்றி, பகலில் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுதல், வேலைத்திறன் குறைவு,கோபம், கவனக்குறைவு ஏற்படுகிறது.இரவில் துாக்கத்தில் இருந்து எழுந்து, சிறுநீர் கழித்தலுக்கு, முதுமை காரணமல்ல. நான்கு காரணங்கள் உள்ளன. அவற்றை பரிசோதனை மூலம் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.ஒன்று, அதிகம் காபி, டீ, மதுபானம் குடிப்பது; இரண்டாவது, முதுமை அடையும் போது, சிலருக்கு சிறுநீர் பைக்கும், சிறுநீர் குழாய்க்கும் இடையில் உள்ள, புரோஸ்டேட் சுரப்பியில் சதை வளர்வது; மூன்றாவது இருதய பிரச்னை. நான்காவது சிறுநீரக பிரச்னை.இதில் எந்த காரணத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை, பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேரை, மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம், குணப்படுத்தி விடலாம். சுமார் பத்து சதவீதம் பேர், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால், பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர்.இந்த புரோஸ்டேட் சுரப்பியின் உள்பகுதியில், சிறிது சதை வெளி நோக்கிவளர்ந்தால் பிரச்னை இல்லை. உள்நோக்கி வளர்ந்தால், அது சிறுநீர் குழாயை அழுத்துகிறது.சிறுநீர் மெலிதாக போவது, சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர் பை காலியாகாதது போன்ற உணர்வு ஏற்படுவது, சிறுநீர் கழிக்க சிரமம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவை, புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்கான அறிகுறிகள்.இப்பிரச்னை பெரிதாகும்போது, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக்கல், சிறுநீரில் ரத்தம் வருவது, சிறுநீர் பை சேதமடைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.இதை, அதிநவீன லேசர் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.கே.எம்.சி.எச்.,ல் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X