திருப்பூரில் பள்ளிவாசல் 'சீல்' வைக்க எதிர்ப்பு: பல மணி நேரம் மறியல்; போக்குவரத்து ஸ்தம்பித்தது
Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்;வழிபாட்டு தலத்துக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து முடங்கியது.திருப்பூர், வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில், பள்ளிவாசல் உள்ளது. 'இந்த இடம் வணிகப்பயன்பாட்டுக்கான இடம்; விதிகளை மீறி வழிபாட்டு தலமாக செயல்படுகிறது' என, 2014ம் ஆண்டு, குடியிருப்பு நலச்சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த ஆறு மாதம் முன்பு, வழிபாட்டு தலத்துக்கு 'சீல்' வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளால், 'சீல்' வைக்க முடியவில்லை. கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டது.நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், வழிபாட்டு தலத்துக்கு 'சீல்' வைக்க இருந்தனர். இதையறிந்து, அனுப்பர்பாளையம் புதுாரில் இஸ்லாமியர்கள் சிலர் காலை, 9:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே திருப்பூர் சி.டி.சி., கார்னரில் திரண்டு மறியல் செய்தனர். அங்கிருந்து உஷா தியேட்டர் சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மாநகராட்சி சந்திப்பை அடைந்தனர். எஸ்.பி., செஷாங் சாய், துணை கமிஷனர் வனிதா என, பலர் பேச்சு நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. தாராபுரம், பல்லடம், உடுமலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.காலை 10:00 மணி முதல் நீடித்த மறியல், மாலை 5:30 மணியளவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'வழிபாட்டு தலம் விவகாரம் தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, வரும் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது' என்றனர்.



பாதிப்பு

சாலை மறியலால் 7:30 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிரதான ரோடுகளில் காலையில் இருந்து தொடர்ந்த மறியல் காரணமாக பல இடங்களில் பயணிகளை, பாதியில் இறக்கி விட்டு பஸ்கள் திரும்பின. மறியல் நடந்த இடங்களில் போராட்டக்காரர்கள், வாகனங்களை அனுமதிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள், பஸ்சிற்காக தொடர்ந்து காத்து கொண்டிருந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் என பலர் பெரும் சிரமப்பட்டனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202213:33:19 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ......
Rate this:
Cancel
lana -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202211:55:36 IST Report Abuse
lana கோவில் என்றால் உடனே இடிக்க வேண்டும் இது பிச்சை போட்ட வர்க்கம் உடனே அல்ல எப்பவுமே இடிக்க முடியாது. 7 1/2 மணி நேரம் அல்ல நாட்டுக்கே இவர்களால் 7 1/2 தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X