குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, முதல் முறையாக, நினைவுத் துாண் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம் நாடு மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த, 439 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கல்லுாரி முன், போர் நினைவு சதுக்கம் அமைக்கப்பட்டு, போரில் உயிரிழந்தவர்களுக்கு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கல்லுாரி மற்றும் ராணுவத்தில் பணியின்போது, உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாக, புதிய நினைவு துாண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை, ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்., ஜெனரல் மோகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இனி, போர் நினைவுத் துாணை போன்று, இங்கும் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.