தொழிலகங்களில் பெண்கள் 'பாதுகாப்பு பெட்டி':திட்டத்தை துவக்கினார் அமைச்சர் கீதாஜீவன்
Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அவிநாசி;தொழில் நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில், 'பாதுகாப்பு பெட்டி' திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கிவைத்தார்.பணிபுரியும் இடங்களில், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் தொழில் நிறுவனங்களில், 'பாதுகாப்பு பெட்டி' வைக்கும் அறிமுக நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரையில் நடந்தது.கலெக்டர் வினீத், வரவேற்றார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா தலைமை வகித்தார். கருத்தரங்கை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.பின், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகளுக்கு 'பாதுகாப்பு பெட்டி' வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:தன்னாவலர்கள் மூலம், தொழில் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்வது தொடர்பாக, 1.16 லட்சம் பேர் கையெழுத்திட்ட புகார் மனு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் 'பாதுகாப்பு பெட்டி' வைக்கப்பட வேண்டும்.நிறுவனங்களில், நான்கு பேர் கொண்ட 'உள்ளக கமிட்டி' கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். பெட்டியில் போடப்படும் புகாரை அவர்களை நியாயமான முறையில் கையாண்டு, தீர்வு காண வேண்டும். தீர்வுகாணப்படாவிட்டால், கலெக்டர் தலைமையில் செயல்படும் உள்ளூர் கமிட்டியிடம் புகார் தெரிவிக்கலாம்.புகாரின் தன்மைக்கேற்ப, நிறுவனத்திற்கு முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் அபராதம், தொடர்ந்து புகார் வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். புகாருக்குள்ளான நபர் மீது காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்ட பலர் பேசினர்.



'பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரிப்பு'

அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டி:கடந்த, 2020 -- 21ல், உழைக்கும் பெண்களின் சதவீதம், 23.8 சதவீதமாக இருந்தது; கடந்த, பிப்., மாதம் எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி, இது, 25.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்கள், 65.07 சதவீதம், பெண்கள், 54.4 சதவீதம் உழைக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.கடந்தாண்டு, கொரோனாவுக்கு பின், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. உழைக்கும் பெண்களின் சதவீதம், 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது.நிறுவனங்களில், நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக புகார் வந்தால், உரிய துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202206:38:39 IST Report Abuse
ராஜா 100 நாட்களுக்குள் ஏதோ செய்வோம் என்று தேர்தலுக்கு முன் சொன்னீர்களே... அது இப்போ என்ன ஆச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X