வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 18 பேருக்கு அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 45 சென்ட் பரப்பளவில், தலா இரண்டரை சென்ட் இலவச வீட்டுமனை பட்டா கடந்த 2008ல் வழங்கப்பட்டது. ஆனால் இடம் அளவீடு செய்து தரவில்லை.இதனால் அருகிலுள்ள விவசாயிகள் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து கரும்பு, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என ஆதிதிராவிட பகுதி மக்கள் போராட்டம் அறிவித்தனர். அப்போது நிலஅளவீடு செய்து, கருங்கல் நடப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, நேற்று காலை 10:30 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் பேசி சமாதானம் செய்தனர்.அதில், வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படும் என்பதால் அந்த இடத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், 18 பயனாளிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர்.அதையேற்று பகல் 11:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X