சென்னை-அ.தி.மு.க., அலுவலகஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, பழனிசாமி கையெழுத்திடாததற்கு, பன்னீர்செல்வம் ஆதரவாளரும், பெரம்பலுார் மாவட்ட செயலருமான ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![]()
|
சென்னையில் அவர் அளித்த பேட்டி:பன்னீர்செல்வம் நேற்று முன்தினம், கட்சி தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம், தொலைபேசியில் பேசினார். 'மாவட்ட செயலர்கள், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை தயார் செய்து அனுப்பி விட்டனரா; அவர்களுக்கு படிவம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். படிவத்தை அனுப்புங்கள்' எனக் கூற, அவர் பழனிசாமியிடம் கேட்டு சொல்வ தாகக் கூறினார்.தகவல் வராததால், மாலையில் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை, பழனிசாமி திருப்பி அனுப்பி, அ.தி.மு.க., தொண்டர்கள் தடுமாறும் நிலையை ஏற்படுத்தினார்.
இரட்டை இலையில் போட்டியிட பன்னீர்செல்வம் கையெழுத்திட தயாராக இருந்தும், தி.மு.க.,வுக்கு துணை போகிற வகையில் பழனிசாமியை வழி நடத்தும் கும்பல், படிவத்தில் கையெழுத்திட தயங்கியதை கண்டிக்கிறேன்.கட்சி தலைமை அலுவலக ஊழியர் ஒருவர், பன்னீர்செல்வத்திடம் வந்து, 'கட்சி அலுவலக ஊழியர்களுக்கும், அண்ணா தொழிற்சங்க ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கும் பொறுப்புபொருளாளரிடம் உள்ளது.'நீங்கள் கையெழுத்திட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி பெற்று, காசோலை வழங்க வேண்டும்' என, குறிப்பை கொடுத்தார்.
![]()
|