ஜெயலலிதா வீட்டை வாங்கலாம்; பன்னீர்செல்வம் விருப்பம்; பழனிசாமி மறுப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஜெயலலிதா வீட்டை வாங்கலாம்; பன்னீர்செல்வம் விருப்பம்; பழனிசாமி மறுப்பு
Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 

சென்னை-அ.தி.மு.க., அலுவலகஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, பழனிசாமி கையெழுத்திடாததற்கு, பன்னீர்செல்வம் ஆதரவாளரும், பெரம்பலுார் மாவட்ட செயலருமான ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.latest tamil news


சென்னையில் அவர் அளித்த பேட்டி:பன்னீர்செல்வம் நேற்று முன்தினம், கட்சி தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம், தொலைபேசியில் பேசினார். 'மாவட்ட செயலர்கள், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை தயார் செய்து அனுப்பி விட்டனரா; அவர்களுக்கு படிவம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். படிவத்தை அனுப்புங்கள்' எனக் கூற, அவர் பழனிசாமியிடம் கேட்டு சொல்வ தாகக் கூறினார்.தகவல் வராததால், மாலையில் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை, பழனிசாமி திருப்பி அனுப்பி, அ.தி.மு.க., தொண்டர்கள் தடுமாறும் நிலையை ஏற்படுத்தினார்.

இரட்டை இலையில் போட்டியிட பன்னீர்செல்வம் கையெழுத்திட தயாராக இருந்தும், தி.மு.க.,வுக்கு துணை போகிற வகையில் பழனிசாமியை வழி நடத்தும் கும்பல், படிவத்தில் கையெழுத்திட தயங்கியதை கண்டிக்கிறேன்.கட்சி தலைமை அலுவலக ஊழியர் ஒருவர், பன்னீர்செல்வத்திடம் வந்து, 'கட்சி அலுவலக ஊழியர்களுக்கும், அண்ணா தொழிற்சங்க ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கும் பொறுப்புபொருளாளரிடம் உள்ளது.'நீங்கள் கையெழுத்திட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி பெற்று, காசோலை வழங்க வேண்டும்' என, குறிப்பை கொடுத்தார்.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கையெழுத்திட்டு, பழனிசாமிக்கு அனுப்பப்பட்டது. அதிலும் கையெழுத்திடாமல், ஊழியர்கள் ஊதியத்தை தர இயலாத நிலையை பழனிசாமிஏற்படுத்தி உள்ளார். சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை வாங்கலாம் என பன்னீர்செல்வம் கூறியதையும், பழனிசாமி கேட்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X