ரூ.65 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு... 2.50 கோடி டன் பாதுகாக்க நடவடிக்கை!
Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக, சிலாவட்டம் பகுதியில், 65 கோடி ரூபாயில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இவற்றில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், விவசாயிகள் அதிகளவில் நெல் பயிரிடுகின்றனர்.



latest tamil news



பாதிப்பு



மாவட்டத்தில் நவரை உள்ளிட்ட பருவங்களில் பயிரிடப்படும் நெல், அறுவடை செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த பருவத்திற்கு, மாவட்டம் முழுதும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 90க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிகமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

வாணிபக் கழக அலுவலர்கள், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம், அண்டவாக்கம், கீரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்காலிக திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டன.சில மாதங்களாக, அடிக்கடி மழை பெய்ததால், கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதை தவிர்க்க, மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கிடங்குகள் அமைக்க வேண்டும் என, அரசு மற்றும் கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களிலும், விவசாய சங்கத்தினர் மனுக்கள் அளித்தனர்.



10 ஏக்கர்



இதை பரிசீலத்த மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில், நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க இடம் முடிவு செய்தது.தொடர்ந்து, வருவாய் துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இணைந்து, கிடங்கு அமைத்தற்கான இடத்தை தேடின.இதையடுத்து, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.கலெக்டரின் உத்தரவையடுத்து, சிலாவட்டம் பகுதியில் கிடங்கு அமைப்பதற்காக, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






'டெண்டர்'



இந்த கிடங்கில், 1.50 கோடி டன் நெல் சேமிக்க முடியும். அதே வளாகத்தில் 1 கோடி டன் நெல் சேமிக்கும் வகையில், மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெயர் குறிப்பிடாத நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, மாவட்டத்தில் முதல் முறையாக சிலாவட்டம் கிராமத்தில், 1.50 கோடி டன் நெல் சேமிக்கும் வகையில், கிடங்கு அமைக்கப்படுகிறது.இதே வளாகத்தில், 1 கோடி டன் நெல் சேமித்து வைக்கும் வகையில், மற்றொரு கிடங்கு அமைக்கப்படுகிறது. இந்த கிடங்கு, தானியங்கள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.உயர் தரைத்தளம், கூரை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏக்கரில் கிடங்கு அமைக்கப்படுகிறது. 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



மகிழ்ச்சி



செங்கல்பட்டு மாவட்ட தமிழக நதிகள் இணைப்பு விவசாய நலச்சங்க மாநில தலைவர் பழையனுார் மு.மணி கூறியதாவது:
ஒவ்வொரு மழைக்காலத்திலும், திறந்த வெளி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும். ஈரப்பதத்தால் மூட்டைகளிலேயே பயிர் முளைக்கும் நிலை இருந்தது. தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக, சிலாவட்டம் கிராமத்தில் நெல் மூட்டைகள் பாதுகாக்க, சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுத்த, அரசு மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூலை-202209:57:59 IST Report Abuse
Lakshmipathi Jayaraman ஒவ்வொரு DPCக்கும் ஒவ்வொரு சேமிப்பு கிடங்கு கட்டினால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
01-ஜூலை-202208:42:53 IST Report Abuse
குமரன் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இதுபோன்ற குடோன்களைக் கட்டவேண்டும்.
Rate this:
Cancel
01-ஜூலை-202208:36:41 IST Report Abuse
கோவேந்தன் அருமையான நடவடிக்கை. மழையில் நெல் மூட்டைகள் நனையும்போது விவசாயிகள் அதைப்பார்த்து கண்ணீர் வடிப்பதையும், இந்த நெல் மூட்டைகளை காப்பாற்ற யாராவது வரமாட்டாரகளா என ஏங்குவதை நான் பார்த்திருக்கிறேன். நெல் மூட்டைகளை காப்பாற்றிய அரசுக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X