போலீசார் காத்திருப்பதைத் தவிர்க்க 'டோக்கன்'; மதுரை மத்திய சிறையில் புது வசதி
Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை: மதுரை சிறையில் கைதிகளை அடைக்கவும், அழைத்துச் செல்லவும் வரும் ஆயுதப்படை போலீசார் காத்திருப்பதைத் தவிர்க்க 'டோக்கன்' வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.



latest tamil news



மதுரை சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் குறைந்தது 20 பேராவது விசாரணை கைதிகளாக அடைக்கப்படுகின்றனர். அதேசமயம் நீதிமன்ற விசாரணைக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

விசாரணை முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து கைதிகளை விட்டுச்செல்ல போலீசாருக்கு இரவாகி விடுகிறது. ஒரு கைதியை சிறைக்குள் அனுமதிக்க குறைந்தது ஒருமணி நேரமாகிறது. இப்படி ஒவ்வொரு கைதியையும் உள்ளே அனுமதிக்க பல மணி நேரம் ஆகிறது. அதுவரை போலீசார் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதை தவிர்க்க டோக்கன் வசதி அறிமுகப்படுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி போலீசார் வந்ததும் அவர்களுக்கு வரிசைப்படி டோக்கன் எண் வழங்கப்படும். அதனடிப்படையில் கைதிகளை அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கைதிகள், போலீசார் காத்திருப்பை தவிர்க்க மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை உதவி ஜெயிலர் ஒருவரை சிறை நிர்வாகம் நியமித்துள்ளது. இவர் கைதிகளை உடனுக்குடன் பரிசோதித்து, ஆவணங்களை ஆய்வு செய்து சிறைக்குள் அனுமதிப்பார்.






இதற்கிடையே உடல்நலம் பாதித்த கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை முடியும் வரை பாதுகாக்க மதுரை நகர் ஆயுதப்படை தயங்குவதால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாரையே வரவழைத்து அவர்களுடன் சிறை நிர்வாகம் கைதிகளை அனுப்பி வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூலை-202210:58:34 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு பதிலாக ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் ஒவ்வொரு நீதிபதியை பணியில் அமர்த்தினால் போதுமே, பல லட்சம் கோடி பணம் மிச்சமாகும், வேலைவாய்ப்பும் கொடுத்தது போல் இருக்கும், நல்ல கருத்துக்களை சொல்லி இங்கு யாரும் கேட்கப்போவது இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Raa - Chennai,இந்தியா
01-ஜூலை-202215:33:04 IST Report Abuse
Raaஉண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை. திருத்தம்: ஒவ்வொரு "சிறைச்சாலைக்கும்" ஒவ்வொரு நீதிபதியை. for known reason, many government bodies lost thinking differently......
Rate this:
Cancel
01-ஜூலை-202210:24:49 IST Report Abuse
ஆரூர் ரங் கீழ் நிலை கிரிமினல் கோர்ட்களை சிறை வளாகத்திலேயே அமைத்தால்🤔 என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X