பெரியார் அதிகாரம் அமைப்பு தலைவர் உட்பட 2 பேர் குண்டாசில் கைது | சேலம் செய்திகள் | Dinamalar
பெரியார் அதிகாரம் அமைப்பு தலைவர் உட்பட 2 பேர் குண்டாசில் கைது
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 


சேலம், பெரியார் அதிகாரம் அமைப்பு தலைவர் உட்பட, இரண்டு பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம், கந்தம்பட்டியை சேர்ந்த அழகு மகன் தலித்மணிவண்ணன்,45. பெரியார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவராக உள்ள இவர் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடன் சேலம், அழகாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் இளமாறன்,42, சேர்ந்து சேலம், செவ்வாய்ப்பேட்டை, பஜார் தெருவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வரும், அசோக்குமார்,33; என்பவரை கடந்த, 2021 ஜன.,8ல் 35 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டினர். அவர் அளித்த புகாரின் படி, கடந்த ஜூன் 18ல் இருவரையும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இளமாறனை, 2018ல் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டு பேரும் சேர்ந்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதால், இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தெற்கு துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல்ேஹாதா உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு நகலை இன்ஸ்பெக்டர் வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X