ஆறாத புண்களை குணப்படுத்தும் எஸ்.என்.எஸ்., மருத்துவமனை | சேலம் செய்திகள் | Dinamalar
ஆறாத புண்களை குணப்படுத்தும் எஸ்.என்.எஸ்., மருத்துவமனை
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

கோவை தனியார் மருத்துவமனை கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சேலம் எஸ்.என்.எஸ்., மருத்துவமனை டாக்டர் சுரேஷ்குமார், சிகிச்சை அளித்து குணமாக்கினார்.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த கலையரசி,55, என்பவருக்கு இரு மாதங்களுக்கு முன், கோவை தனியார் மருத்துவமனையில், கர்ப்பப்பை அகற்றுவது மற்றும் குடலிறக்கம் ஆகிய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு பின் வீடு திரும்பிய கலையரசிக்கு, 10 நாட்களிலேயே தையல் அனைத்தும் பிரிந்து, அடி வயிற்று பகுதியிலிருந்து கெட்ட நீர் மற்றும் சீல் கசிந்தது. மீண்டும் கோவை மருத்துவமனையை அணுகிய போது, அது சாதாரண கிருமித் தொற்றுதான், சரியாகி விடும் என
கூறி அனுப்பி வைத்தனர்.

இரண்டு மாதம் ஆகியும் தையல் பிரிந்த புண் ஆறவில்லை. இந்நிலையில் அவர், சேலம் அழகாபுரத்தில் உள்ள எஸ்.என்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் சிகிச்சையளித்தார். கலையரசிக்கு மீண்டும் ஆபரேஷன் செய்து, அழுகிய நிலையில் இருந்த அனைத்து பாகங்களையும் அகற்றினார். புண்ணை நல்ல நிலைக்கு கொண்டு வந்து, மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முழுமையாக குணமடையச் செய்தார். சேலத்திலேயே மிகவும் குறைந்த செலவில் சரிசெய்த டாக்டர் சுரேஷ்குமாரை பாராட்டினர். இதுபோன்று சர்க்கரை நோயினால் வரும் புண், தீக்காயங்கள், தொழிற்சாலையில் ஏற்படும் கைப்புண், முகத்தில் ஏற்படும் வெட்டு காயங்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 97900 07744 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X