புகையிலை பொருட்கள் விற்ற 12 கடைகளுக்கு 'சீல்' போலீஸ் நடவடிக்கையால் வியாபாரிகள் அலறல் | சேலம் செய்திகள் | Dinamalar
புகையிலை பொருட்கள் விற்ற 12 கடைகளுக்கு 'சீல்' போலீஸ் நடவடிக்கையால் வியாபாரிகள் அலறல்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடைகளுக்கு சீல் வைப்பு நடவடிக்கையை, சேலம் போலீசார் கையில் எடுத்து இருப்பதால், வியாபாரிகள் அலறுகின்றனர்.
சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில், கைது நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாதா உத்தரவிட்டார். கடந்த, ஆறு நாளில், 36 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புகையிலை பொருட்களின் விற்பனை நின்றபாடு இல்லை.

அதை அடுத்து விற்பனை செய்யும் கடைகளை உணவு பாதுகாப்பு நல அலுவலர்களின் துணையுடன்,'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டது. நேற்று முன்தினம், ஒரே நாளில், ஒன்பது கடைகளுக்கு,'சீல்' வைக்கப்பட்டது.
நேற்று மதியம், தாதகாப்பட்டியில் மளிகை கடை பெயரில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரசிங்,34, கடையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா, உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் சோதனை செய்ததில், இரண்டு மூட்டைகளில், 25 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார் கடைக்கு, 'சீல்' வைத்தனர். நேற்று மாலை வரை, 12 கடைகள், 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளதால், புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு அலறி அடித்து ஓடத் துவங்கி உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X