ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

ஆத்துார் போக்குவரத்து கிளை பணிமனை முன், ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு போக்குவரத்து கிளை பணிமனை முன் நேற்று, அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற நல சங்க செயலர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின், 79 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஓய்வு பெற்ற பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

*மேட்டூர் அரசு போக்குவரத்து பணிமனை முன், சி.ஐ.டி.யு.,சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு.,கிளைச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X