ரவுடிக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலை | கடலூர் செய்திகள் | Dinamalar
ரவுடிக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலை
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

வடலுார்: வடலுாரில் ரவுடியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், வடலுார், அன்னை சத்தியா வீதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டியன், 34; இவர், மீது வடலுார், நெய்வேலி, மந்தாரக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு வடலுார் உழவர் சந்தை அருகில் தனது நண்பர் விமலுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த சேராக்குப்பத்தை சேர்ந்த விசுவநாதன் மகன் பாலாஜி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய கும்பல் முன்விரோதம் காரணமாக அருள்பாண்டியனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிது. பலத்த காயமடைந்த அருள்பாண்டியன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜி உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X