6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மாமாவுக்கு ஆயுள்; அத்தைக்கு '10 ஆண்டு!'
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமாவுக்கு ஆயுள் தண்டனையும், அத்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமியை, அவரது தாய் கைவிட்ட நிலையில், தந்தை, பாட்டி ஆகியோர் பராமரித்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு தந்தை, பாட்டி ஆகியோர் இறந்த நிலையில், சிறுமியை அவரது அத்தை, சென்னை தி.நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்தார்.சிறுமியை, அவரது மாமா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து, சிறுமி தன் அத்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சிறுமியை தாக்கினர். இது குறித்து, அந்த சிறுமி தன் மற்றொரு உறவினரிடம் தெரிவித்தார். அவர்கள், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் அத்தை, மாமா இருவரையும் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, சென்னை 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பு:சிறுமியின் அத்தை, மாமா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமியின் மாமாவுக்கு ஆயுள் தண்டனை, 25 ஆயிரம் அபராதம்; அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X