கன்னியாகுமரியில் சூறாவளி 150 அடி தேசிய கொடி தேசம் | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
கன்னியாகுமரியில் சூறாவளி 150 அடி தேசிய கொடி தேசம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் வீசிய சூறாவளியால், 150 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி சேதம் அடைந்தது. மாவட்டத்தில், ஆடி மாதம் காற்று அதிக வேகத்தில் வீசும். ஆனால் இந்த ஆண்டு ஆடி பிறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் சூறாவளி வீசுகிறது; மரங்கள் பல விழுந்துள்ளன. கன்னியாகுமரியில் 150 அடி உயர கொடிகம்பத்தில், 32 அடி அகலம், 48 அடி நீள தேசிய கொடி ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றில் அந்த கொடி சேதமடைந்தது.எளிதில் சேதம் அடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் தேசிய கொடி சேதம் அடைந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X