மளிகை வியாபாரி மகனை கடத்திய ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சேலம்:மளிகை வியாபாரி மகனை கடத்திய கும்பலில், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மூலாராம், 50. இவர், சேலம், பட்டைக்கோவில் அருகே மளிகை கடை நடத்துகிறார்.ஜூன், 2ல், அவரது மகன் ஜெய்ராம், 22, கடையில் இருந்தார். அப்போது, 'இன்னோவா' காரில் வந்த ஆறு பேர், ஜெய்ராமை கடத்தினர்.தனிப்படை போலீசார் விசாரணையில், கடத்தப்பட்டவர் மற்றும் அவரது தந்தை மூலாராம் ஆகியோர், தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து, சேலத்தில் வினியோகித்தது தெரிந்தது.
அத்துடன் ராஜஸ்தான் கும்பலுடன் கைகோர்த்து, அங்கிருந்து புகையிலை பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை கடத்தி, அவற்றில் இருந்து புகையிலை பொருட்களை 'அபேஸ்' செய்வதும் தெரிந்தது.மேலும், ராஜஸ்தான், பெங்களூரு வியாபாரிகளிடம் வாங்கிய புகையிலை பொருட்களுக்கான பணத்தை வசூலிக்க வந்த போது, ஜெய்ராம் கடத்தப்பட்டதும் தெரிந்தது.

இதையடுத்து, ஜூன், 5ல் பெங்களூருவில் ஜெய்ராமை மீட்ட போலீசார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி, நேற்று முன்தினம், பெங்களூருவில் முகாமிட்டிருந்த கடத்தல் கும்பலில் தொடர்புடைய, ராஜஸ்தானைச் சேர்ந்த பசாராம், 32, பிரகாஷ், 24, தினேஷ், 19, ஆகியோரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இருவரை தேடுகின்றனர்.வெளி மாநிலங்களுக்கு சென்று கடத்தல் கும்பலை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசாரை, கமிஷனர் நஜ்முல்ஹோதா பாராட்டினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X