வேலூரில் மேலும் ஒரு 'அறிவுஜீவி' வேலை:பழுதான ஜீப்புடன் சாலை அமைத்து 'கூத்து'
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

வேலுார்:வேலுார் மாநகராட்சி பகுதியில், மேலும் ஒரு வாகனம் மீது சாலை அமைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, எங்கு வாகனங்கள் மீது சாலை போடப்பட்டு உள்ளது என அறிக்கை அளிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், வேலுார் வந்ததையொட்டி, கடந்த 27ல் இரவோடு இரவாக வேலுாரில் பல இடங்களில் சாலை போட்டுஉள்ளனர்.அதில், மெயின் பஜார் அருகே, காளிகாம்பாள் கோவில் தெருவில், சிவா என்பவர் கடை முன் நிறுத்தியிருந்த பைக்குடன் சிமென்ட் சாலை போடப் பட்டது. இதனால், இரண்டு மணி நேரம் போராடி, சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர்.
இதையடுத்து, அந்த வினோத சாலை அமைத்த குமார் என்பவரின் ஒப்பந்தத்தை, மாநகராட்சி அதிகாரிகள் ரத்து செய்துஉள்ளனர்.

அதுபோல, பொன்னியம்மன் கோவில் தெருவில், ஒரு மாதத்திற்கு முன், பழுதடைந்த அரசு ஜீப் மீது தார் சாலை போடப்பட்ட தகவல் தெரிந்தது. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அப் பகுதியில் ஆய்வு செய்தார்.'கிரேன்' மூலம் ஜீப் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் தார் சாலை போடப்பட்டது.
எனவே, வேலுார் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில், எங்கெங்கு வாகனங்கள் மீது சாலை போடப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் அறிக்கை அனுப்ப, அந்தந்த மண்டல பொறியாளர்களுக்கு, கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.




அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?


உள்ளாட்சிகளில் எந்த ஒரு பணியையும் கண்காணிக்க, வார்டு, மண்டல அளவில் பொறியாளர்கள் உள்ளனர்.இவர்கள் பணி நடக்கும் போது, நிகழ்விடத்தில் இருந்து கண்காணிக்க வேண்டும். பணி முடிந்த பின், அதன் தரத்தை ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே, பணப் பட்டுவாடா நடைபெறும். குறிப்பாக, சாலை பணிகள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பொறியாளர், நிகழ்விடத்தில் இருந்து பணியை கண்காணிக்க வேண்டும்.

அப்படி இருக்கையில், பொன்னியம்மன் கோவில் தெருவில், ஒரு மாதத்திற்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டு, ஜீப்புடன் சேர்த்து சாலை அமைத்துள்ளனர்.காளிகாம்பாள் கோவில் தெருவில், பைக்குடன் சேர்த்து சிமென்ட் சாலை அமைத்துள்ளனர். இந்த ஒப்பந்ததாரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பணியை கண்காணிக்க தவறிய பொறியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X