சென்னை:தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, தமிழகத்தில் பிறந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சேர்மராஜன் பொறுப்பேற்றார்.
1987ல், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில், முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, பீஹார் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு சட்டம் - ஒழுங்கு, குற்றத் தடுப்பு மற்றும் தேர்தல் பாதுகாப்பு என, சவால்கள் நிறைந்த பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பீஹாரில் 12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த சேர்மராஜன், 1999ல் உளவுப் பிரிவில் இணைந்தார்.தமிழகம், டில்லி, குஜராத், உ.பி., என, பல மாநிலங்களில், மத்திய உளவு அமைப்பான, ஐ.பி.,யில் பணிபுரிந்துள்ளார். மூன்று ஆண்டுகள், லண்டனில் உள்ள இந்திய துாதரகத்திலும் பணியாற்றி உள்ளார்; சேர்மராஜன் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார்.