பா.ஜ., ஆட்சியில் நாடு பல சிரமங்களை சந்திக்கிறது:இந்திய கம்யூ., தேசிய செயலாளர் பேட்டி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பா.ஜ., ஆட்சியில் நாடு பல சிரமங்களை சந்திக்கிறது:இந்திய கம்யூ., தேசிய செயலாளர் பேட்டி
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 

ஸ்ரீவில்லிபுத்தூர்:''தற்போதைய மத்திய பா.ஜ., ஆட்சியில் நாடு பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திய கம்யூ., தேசிய செயலாளர் ராஜா கூறினார்.
அவர் கூறியதாவது: தற்போது நாடு அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. பல்வேறு சிரமங்களை சந்தித்து தவித்து வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

இது இரு நபர்களுக்கு இடைப்பட்ட தேர்தல் அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், மதச்சார்பற்ற அமைப்புகளுக்கும் இடைப்பட்ட தேர்தல்.பா.ஜ., நிர்வாகி நுபுர் சர்மா பேச்சு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் பிரிப்பு என்பது லோக்சபாவில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்து. ஆனால் பிரதமர் மோடி அரசில் லோக்சபா சரியாக செயல்படவில்லை. பார்லிமென்ட் கருத்துக்கள் கேட்கப்படாத நிலை உள்ளது என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X