பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கூட்டம் | தேனி செய்திகள் | Dinamalar
பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கூட்டம்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 

கம்பம்:தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பன்னீர் செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கூட்டங்களை நடத்தினர்.
கம்பம் புதுப்பட்டியில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையன் தலைமையில் பழனிசாமி ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூடலுார் சோலைராஜ், கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் நடந்த கட்டடத்திற்கு எதிரில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.இக்கூட்டத்திற்கு போட்டியாக கம்பத்தில் மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் கம்பம் தெற்கு, வடக்கு செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், உத்தமபாளையம், சின்னமனுார் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X