ஆசிரியர் தம்பதியை தாக்கிரூ.10 லட்சம், 140 பவுன் கொள்ளை:முகமூடி நபர்கள் அட்டகாசம்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

தென்காசி:தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி அருணாச்சலம் 88, ஜாய் சொர்ணதேவியை 83, தாக்கி ரூ.10 லட்சம், 140 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மூன்று முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரை அருணாச்சலம் ஜாய் சொர்ணதேவி தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகள் ராணி இவர்களுடன் வசித்து வருகிறார். மற்றவர்கள் வெளியூரில் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அருணாச்சலம் வீட்டில் டிவி பார்த்தார். மனைவி வாசலில் உட்கார்ந்திருந்தார். இரவு 7:00 மணிக்கு முகமூடி அணிந்த மூவர்கள் சொர்ணதேவியை கம்பால் தாக்கி வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.பின் அருணாச்சலத்தையும் தாக்கினர். அவர்களை கயிறால் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.10 லட்சம், 140 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.இரவு 10:00 மணிக்கு வீடு திரும்பிய ராணி ரத்தக் காயங்களுடன் கிடந்த தந்தை, தாயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மோப்பநாய் வீட்டிலிருந்து சற்று தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பியது. பீரோ சாவி இருக்கும் இடத்தை தெரிந்து திருடியதால் பழக்கமானவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X