கோயில் விழாக்களில் நகை பறிப்பு :கணவருடன் பெண் கைது | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
கோயில் விழாக்களில் நகை பறிப்பு :கணவருடன் பெண் கைது
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புதுக்கடை கோயில் விழாவில் நகைகள் திருடியதாக சென்னை கொளத்துார் குமாரி 40, கணவர் குமாரவேல் 40 உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கடை பகுதியிலுள்ள ஒரு கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பொது மக்கள் கூடினர். அதை பயன்படுத்தி ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயற்சி நடந்த போது அவர் சத்தம் போட அதில் ஈடுபட்ட மூவரை அருகில் நின்றவர்கள் பிடித்தனர்.

விசாரணையில் கொளத்துார் குமாரவேல், மனைவி குமாரி, கும்மிடிப்பூண்டி மணிகண்டன் 37, என தெரிந்தது. குமாரிக்கு குமாரவேல் மூன்றாவது கணவர் ஆவார். இவர்கள் கும்பலாக கோயில் விழாக்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X