போலீஸ் செய்தி...
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஜெயில் வார்டன் பலி

நிலக்கோட்டை: பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி 28. திண்டுக்கல் சிறையில் வார்டனாக உள்ளார். நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் நள்ளிரவில் ஊருக்கு திரும்பினார். (ஹெல்மெட் அணியவில்லை). குண்டலப்பட்டி பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.

நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். மணல் அள்ளிய இருவர் கைது சாணார்பட்டி: எல்லைப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 35, அஜய் ராஜ் 23. இருவரும் எல்லைப்பட்டி அருகே பனைப்பட்டி ஓடை பகுதியில் மணல் அள்ளினர். சாணார்பட்டி எஸ்.ஐ., ஜான்சன் ஜெயக்குமார் இருவரையும் கைது செய்தார். டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.கத்திக்குத்து: கைதுவடமதுரை : தென்னம்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி வெங்கிடுசாமி. இவரது மகன் திருப்பதி 31. இவர்களது குல தெய்வமான நாச்சரம்மாளுக்கு கோயில் கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. உறவினரான கார்த்தீஸ்வரன் 31, தகராறு செய்தார். தட்டி கேட்ட திருப்பதியை கார்த்தீஸ்வரன் கத்தியால் குத்தினார்.

வடமதுரை போலீசார் கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.தடுப்பணையில் பெண் உடல் வேடசந்துார்: தாடிக்கொம்பு உலகம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் மனைவி காளியம்மாள் 45. நேற்று முன்தினம் மாயமானார். நேற்று காலை அங்குள்ள தடுப்பணையில் இறந்து கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



தற்கொலை


வத்தலகுண்டு : பழைய வத்தலக்குண்டை சேர்ந்தவர் சுரேஷ் 36. குடும்ப பிரச்னையில் வீட்டில் சண்டையிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. நேற்று தனியார் கிணறு அருகே சுரேஷின் இருசக்கர வாகனம் நின்றிருந்தது. கிணற்றில் பார்த்த போது சுரேஷின் உடல் மிதந்தது. தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X