திரவுபதி முர்முவுக்கு அகாலிதளம் ஆதரவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
திரவுபதி முர்முவுக்கு அகாலிதளம் ஆதரவு
Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

சண்டிகர் : ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தர அகாலிதளம் முடிவு செய்துள்ளது.



ஜனாதிபதி தேர்தல், வரும் ௧௮ல் நடக்கிறது. இதில் தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் முர்முவுக்கு ஆதரவு தர கேட்டுகொண்டார்.

இந்நிலையில், சண்டிகரில் சுக்பீர் சிங் பாதல் நேற்று கூறியதாவது: வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது, சீக்கியர்களை சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், பா.ஜ.,வுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். சீக்கியர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X