'ஆண்களை கண்டாலே பிடிக்காது': 2 மாணவியர் தற்கொலை முயற்சி
Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை: திருச்சி மற்றும் திருநெல்வேலி சட்டக்கல்லுாரி மாணவியர் இருவர், 'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது' என, கடிதம் எழுதி வைத்துவிட்டு, மதுரையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெறுகின்றனர்.



latest tamil news



மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில், 22 வயதுடைய பெண்கள் இருவர் நான்கு நாட்களாக தங்கி இருந்தனர். நேற்று காலை அறை கதவு திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் வீரர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

மாணவியர் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
உடனடியாக, அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

அண்ணா நகர் போலீசார் கூறியதாவது:
இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே தோழியராக உள்ளனர். பள்ளி படிப்பிற்கு பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இதில், ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலி சட்டக்கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது.






இதனால், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதில், ஒரு மாணவிக்கு பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பித்த நிலையில், அதிர்ச்சியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து மதுரை வந்தனர்.

'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது. நாங்கள் இறந்த பிறகு ஒரே குழியில் எங்களை அடக்கம் செய்யுங்கள்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்துள்ளனர்.இவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூலை-202210:28:13 IST Report Abuse
தமிழ் ஏன் இவர்கள் ஆண் இல்லாமலேயே பொறந்துட்டாங்களா
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202213:18:47 IST Report Abuse
Matt P முன்னாலேயெல்லாம் ஆம்புளைங்கள் ஏமாத்திருவாங்கன்னு பார்த்து பார்த்து வளர்ப்பாங்க. இப்போ பொம்புளகூட சேர்ந்தே பொம்புளை புள்ளைங்களும் நாசாமியிர கூடாது என்று பார்த்து வளர்க்க வேண்டிய தேவை. ....பொம்புளைங்க கூட பழகுறதுக்கு ஆம்புளை பயன்கூடவே பழகிட்டு போ ன்னு விட்டுறது தன சரியோ....
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
02-ஜூலை-202213:12:26 IST Report Abuse
S.kausalya இரு பெண்கள் நண்பர்கள் என்றாலே கொச்சையாக தான் pesuvaargalaa? எங்கள் பணியிடத்தில் இரு பெண்கள் 50 வயதுக்கும்மேல் பட்டவர்கள் இருந்தனர். ஒருவர் அங்கு சில காலமாக3 அங்கு பணி புரிந்தவர். மற்றவர் மாறுதலில் அங்கு வந்தவர். இருவருக்கும் நீரிழிவு நோய். எனவே மதியத்தில் ஒரு அறையில் சிறிது ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர். உடனே அவர்கள் இருவரையும் இதே போன்று அசிங்கமாக பேச ஆரம்பித்தனர். அவர்கள் மிக மன வேதனை அடைந்து ஓய்வே வேண்டாம் என்ற நிலைக்கு வந்தனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி பெரிய பிள்ளைகள் உண்டு. இந்த சமுதாயம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது.
Rate this:
02-ஜூலை-202215:34:49 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்பணியிடத்தில் ஓய்வு ? ..... அப்படியென்றால் அரசு அலுவலகமாகத்தான் இருக்க வேண்டும் .... அதுவும் மாநில அரசு ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X