முறைகேடாக பத்திரப்பதிவு ஊழியர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்'
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


திண்டிவனம் : திண்டிவனம் பத்திர பதிவுத் துறையில் கோர்ட் உத்தரவை மீறி தனி நபருக்கு சொத்தை முறைகேடாக கிரயம் செய்து கொடுத்தது தொடர்பாக பத்திர பதிவுத்துறை ஊழியர்கள் 4 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பேராவூர் உள்ளிட்ட இடங்களில் பி.எஸ்.எல்.,என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப் பட்ட நிலங்களை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்பதற்காக, பி.எஸ்.எல்., நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு வாங்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரச்னைக்குரிய நிலங்களை, கடந்த 2019, 2020, 2021 கால கட்டங்களில், திண்டிவனம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் உதவியுடன், கோர்ட் தடை உத்தரவை மீறி முறைகேடாக தனி நபர்களுக்கு கிரயம் செய்து கொடுத்த விபரம் பி.எஸ்.எல்., நிறுவனத்திற்கு தெரியவந்தது.இது குறித்து நிறுவனத்தின் சார்பில் கடலுார் துணை பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், கடலுார் துணை பத்திரப் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான குழுவினர் திண்டிவனம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அதில், முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தற்போது எழுத்தர்களாக மரக்காணத்தில் பணிபுரியும் சிவானந்தம், சத்தியமங்கலத்தில் பணிபுரியும் சண்முகம், செஞ்சியில் பணிபுரியும் ஆறுமுகம், மயிலத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் கடலுார் துணை பதிவுத்துறைத் தலைவர், நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X