காரை ஆக்டிங் டிரைவரான முருகன் ஓட்டியுள்ளார். அப்போது, வசந்தகுமாரியிடம், அவரது மொபைல் போன் எண்ணை வாங்கியவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால், சந்தோஷ்குமாரிடமும் பழக்கம் ஏற்பட்டு குடும்ப நண்பராக பழகி வந்துள்ளார். நாளடைவில், முருகன், வசந்தகுமாரி இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இது 10 நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாருக்கு தெரியவந்தது. மனைவி மற்றும் முருகனை கண்டித்துள்ளார். இதனால், சந்தோஷ்குமாரை தீர்த்து கட்ட முருகன், வசந்தகுமாரி முடிவு செய்தனர்.இருவரின் திட்டப்படி, மகள் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என வசந்தகுமாரி தெரிவித்துள்ளார். அதற்கு முருகன், தான் மாற்றித் தருவதாக கூறி சந்தோஷ்குமாரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
கடந்த 29ம் தேதி காலை 11:00 மணியளவில் சந்தோஷ்குமாரை மினி வேனில் கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இன்று ஆதார் கார்டில் திருத்தம் செய்ய முடியாது. மறுநாள் வருமாறு கூறி விட்டார்கள் என சந்தோஷ்குமாரிடம் கூறியுள்ளார்.பின், வழியில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு, கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் முருகனின் மற்றொரு வாடகை வீட்டில் மதியம் 3:00 மணியளவில் சந்தோஷ்குமார், முருகன், இவரது உறவினரான ஏமப்பேரைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் ஆதி, 18; ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.அப்போது, சந்தோஷ்குமாரை ஆதி பிடித்துக் கொள்ள முருகன் மதுபாட்டிலை உடைத்து சந்தோஷ்குமாரை குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர் இருவரும் சந்தோஷ்குமார் உடலை மினி வேனில் கொண்டு வந்து உளுந்துார்பேட்டை, கெடிலம் ஆற்றுப்பாலம் அருகே போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது தெரியவந்தது.இதையடுத்து, உளுந்துார்பேட்டை போலீசார் முருகன், சந்தோஷ் குமார் மனைவி வசந்தகுமாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆதியை தேடி வருகின்றனர்.
சந்தோஷ்குமாரை கொலை செய்துவிட்டு முருகன் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். சந்தோஷ்குமாரை காணவில்லை என உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுக்கச் சென்றனர். அப்போது முருகனும் உடன் சென்று சந்தோஷ்குமார் எங்கு சென்றார் என தெரியவில்லையே என புலம்பி நாடகமாடியுள்ளார்.
இவர், மீது சந்தேகமடைந்த சந்தோஷ்குமார் உறவினர்கள், முருகனிடம் விசாரித்தனர். அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை. இதனால் முருகன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.