செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காங்., வக்கீல் பிரிவு
ஆலோசனை கூட்டம்
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., வக்கீல் பிரிவு ஆலோசனை கூட்டம், மூத்த வக்கீல் பழனிவேல் தலைமையில் நடந்தது. தலைவர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர் ராஜேந்திரன், மூத்த வக்கீல் பொன்னப்பன் பேசினர்.
மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்ந்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற நிலையிலேயே தொடர்கிறது. மாநகர காவல் துறை ஆணையர் பதவியை உருவாக்கி, மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைத்து, உரிய பதவிகளை உருவாக்க வேண்டும். மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லுாரி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மங்கலப்பட்டி வனத்தில்
ஆண் சிறுத்தை 'ரிலீஸ்'
புன்செய்புளியம்பட்டி: தாளவாடி மலையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக, கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, நேற்று முன்தினம் கூண்டில் சிக்கியது. நான்கு வயதான ஆண் சிறுத்தை, வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. பின் கூண்டுடன் லாரியில் ஏற்றி, பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா, மங்கலப்பட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று நேற்று விடுவித்தனர்.
௧ கோடி ரூபாய் மதிப்பில்
வளர்ச்சிப்பணி தொடக்கம்
கோபி: கோபி சட்டசபை தொகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.
குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், வெள்ளாங்கோயில், அயலுார் பகுதிகளில், தார்ச்சாலை அமைத்தல், சிமென்ட் சாலை, வடிகால் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பூஜை போட்டு துவக்கி வைத்தார். கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
குட்டிகளுடன் சாலையை
கடந்த சிறுத்தையால் அச்சம்
சத்தியமங்கலம்: கோட்டமாளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கோட்டமாளத்துக்கு டூவீலரில் சென்றார். செல்லும் வழியில் வைத்தியநாதன்புரம் பிரிவு அருகில், மாடுகள் கத்தியபடியே சாலையில் வேகமாக வந்தன. உஷாரான அவர் டூவீலரை சற்றே ஓரம் கட்ட, மாடுகள் வந்த திசையில் ஒரு சிறுத்தை மூன்று குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றதை பார்த்தார். டூவீலரை திருப்பிக்கொண்டு சிறிது துாரம் வந்தவழியே சென்றவர், சிறிது நேரத்துக்குப் பிறகு கோட்டமாளம் சென்றார். இதையறிந்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் நல அமைப்பு செயலாளர் ஜெயராமன், ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் மணிபாரதி, ராமசாமி பேசினர். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, 80 மாதமாக நிறுத்தப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வு நாளன்றே ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றாவிட்டால், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
கோவிலில் 33 ஆண்டு பணி;
ஊழியருக்கு பிரிவுபசார விழா
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், வசூல் எழுத்தராக, ௩௩ ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மாரிமுத்து. இவருக்கு பிரிவுபசார விழா நடந்தது. நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமை வகித்தார். மண்டல தணிக்கை அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார் வரவேற்றார். சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோவில் பணியாளர்கள், நண்பர்கள் நினைவுப்பரிசு வழங்கினர்.
மருத்துவ முகாம்

ஈரோடு: உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்தார். இதில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கால்சியம் குறைபாடு பரிசோதனை, ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
26 பேருக்கு கொரோனா
ஈரோடு, ஜூலை 2-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 84 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று புதிதாக, 26 பேருக்கு தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் நான்கு பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குண்டாசில் வாலிபர் கைது
ஈரோடு, ஜூலை 2-
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, ஈரோடு வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், சின்னபானங்குட்டையை சேர்ந்த முனியப்பன் மகன் மணிகண்டன், 27; இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள், ஈரோடு பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. வீரப்பன்சத்திரம் போலீசார் பரிந்துரைப்படி, மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி மாயம்
ஈரோடு, ஜூலை 2-
மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, சூரம்பட்டி, சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம். அச்சக ஊழியரான இவரின் மகள் காவ்யா, 17; அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த, 30ம் தேதி தாய், தந்தை வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் காவ்யா இல்லை. பக்கத்து வீட்டில் கேட்டபோது, ஜெராக்ஸ் எடுப்பதாக கூறி வெ ளியில் சென்றதாக கூறினர். தாய் கற்பகம் புகாரின்படி, மாயமான மாணவியை, சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கி பதுக்கியவர் கைது
அந்தியூர், ஜூலை 2-
பர்கூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்மலை, தாமரைக்கரை, கல்வரையை சேர்ந்தவர் செல்லப்பன், 32; இவரது மாட்டு பண்ணையில், இரண்டு பழைய நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் போனது. இதையடுத்து பர்கூர் போலீசார், மாட்டு பண்ணையில் சோதனை நடத்தி, இரு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அனுமதி, உரிமம் இல்லாதது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X