காது கேளாத, வாய் பேச முடியாதோர் 'விசில்' ஊதி காத்திருப்பு போராட்டம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
காது கேளாத, வாய் பேச முடியாதோர் 'விசில்' ஊதி காத்திருப்பு போராட்டம்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 


ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில், ௧ சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதால் தொகுப்பு வீடு, மாதாந்திர உதவித்தொகையை, 3,௦௦௦ ரூபாயாக உயர்த்த வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு பிரதிநிதிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியரை நியமிக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

வாய் பேச முடியாததால், தொடர்ந்து விசில் ஊதி, கோரிக்கையை வெளிப்படுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு மேல் போராட்டம் தொடர்ந்த நிலையில், வேறு நிகழ்ச்சிக்காக வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூங்கோதை கூறியதாவது: இக்கோரிக்கை அனைத்தும் மாநில அளவிலானது. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். செவித்திறன் குறையுடையோருக்கு தையல் மிஷின், பிற இயந்திரங்கள், தொழில் துவங்க கடன் போன்ற கோரிக்கை இருந்தால் மனுவாக வழங்கினால், விரைவாக வழங்குவதாக, கலெக்டர் உறுதியளித்தார். இதை சங்கத்தினர் ஏற்று கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையேற்று அனைவரும் கலைந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X