ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை யூனியன், சென்னம்பட்டியை சேர்ந்தவர் கிருபானந்தன், ௩௨; இந்திய வனப்பணி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய குடும்பத்தை சேர்ந்த, நான், பிளஸ் ௨ வரை, கோபியில் தனியார் பள்ளியில் படித்தேன். கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில், இ.சி.இ., முடித்து சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தேன். கடந்த, ௨௦௨௧-௨௨ல் நடந்த தேர்வில், ஐ.எப்.எஸ்., தேர்வில் இந்திய அளவில், 16வது இடம், தமிழக அளவில் முதலிடமும் பிடித்தேன். ஒன்பது முறை தேர்வெழுதி, நேர்முக தேர்வு வரை சென்றேன்.
பத்தாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். எனது சகோதரர் முதல் முயற்சியிலேயே ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். டேராடூனில் ஆக., மாதம் முதல் பயிற்சி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.